எனது சித்தப்பாவின் மகனும், நெல்லை ஆர்எம்கேவி நிறுவனத்தின் தலைவருமான எனது அருமை சகோதரன் பொன் ஆனந்த் நெல்லையில் நேற்று திடீர் மரணம் அடைந்த தகவல் என்னை மிகவும் பாதித்தது. 42 வயதான மிகத் துடிதுடிப்பானவர் ஆனந்த். ஆர்எம்கேவி நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட கடுமையான உழைப்பாளி.
சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பொன் ஆனந்த்தின் மூத்த சகோதரர் ஒரு கார் விபத்தில் பலியானார். அந்த வடு மறையும் முன்பே காலன், பொன் ஆனந்த் அவர்களையும் எங்களிடம் இருந்து அழைத்துச்சென்றுவிட்டான். இந்த இரண்டு துயரங்களையும் பார்க்கும் போது, இறைவன் இருக்கிறானா என்றும், நல்ல இதயங்களை எல்லாம் எங்களிடம் இருந்து சீக்கிரம் அழைத்துசெல்வது ஏன் என கேட்கத்தோன்றுகிறது,
பொன் ஆனந்த்தின் இழப்பு எங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய இழப்பாகும், பொன் ஆனந்த்தினை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தார் மற்றும் ஆர்எம்கேவி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு என் சார்பாகவும், எங்கள் குடும்பத்தினர்கள் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது இழப்பினை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தார் அனைவருக்கும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.
பொன் ஆனந்த்தின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
டாக்டர் எஸ்.நடராஜன்
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment