டாக்டர் எஸ். சுப்ரமணியன் நடராஜப் பிள்ளை (1900-1974)
டாக்டர் எஸ். சுப்ரமணியன் நடராஜப் பிள்ளை மார்ச் 1ம் தேதி 1900 பிறந்தவர். இவர் கலோனியல் ரைட் என்பரிடம் பயிற்சிபெற்ற பிரபல கண்மருத்துவர். இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் 14 பேரப்பிள்ளைகள். தஞ்சாவூர் மருத்துவ பள்ளியில் படிக்கும்போது ஹர்க்கி விளையாட்டு குழுவில் பல பரிசுகளை வென்றவர். திருநெல்வேலியில் உதவி மருத்துவராக பணியாற்றினார். அப்போது பிரிட்டிஷ் ராஜ்யம் நடந்துவந்ததால் ஒன்றறை வருடங்கள் ஜெயிலிலும் அடுத்த ஒன்றறை வருடங்கள் ஏஜென்சி டூட்டி ஆற்றியவர். வேட்டையாடுவதிலும் வல்லவர்.
1939ல் எல். ஓ. பட்டம் பெற்றார். மேலும் மதுரையில் உள்ள அரசு எர்ஸ்கின் மருத்துவமனையில் 1949 முத்ல் 1951 ஆண்டு பணியாற்றி தன் கடைசி நாட்களையும் மதுரையில் கழித்தார். டிவிஎஸ குடும்பத்தாரின் உதவியுடன் அந்நர்ட்களில் விருதுநகர், திண்டுக்கல் போன்ற பல இடங்களில் இலவச கண்சிகிச்சை முகாம்கள் நடத்தி ஏழை எளிய மக்களுக்கு கண் ஒளிவழங்கி பாராட்டுபெற்றவர். லயன்ஸ் கிளப் உறுப்பினராக இவர், இரணடு முறை கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாக பதவி வகித்துள்ளார்.
டாக்டர் என் எஸ் சுந்தரம்
டாக்டர் என் எஸ் சுந்தரம் ஜனவரி மாதம் 19ம் நாள் 1927ல் திருநெல்வேலி தாலுக்காவில் உள்ள குலசேகரப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தவர். கடமை தவறாமை, ஒழுக்கம் மற்றும் ஏழைகளுக்கு உதவுவதில் தன்னை இளம்பருவத்திலிருந்தே ஈடுபடுத்திக்கொண்டவர். மதுரையை சேர்ந்த இவரது தந்தை டாக்டர் எஸ். நடராஜப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாளுக்கு மகனாக பிறந்தவர் தன் தந்தையின் சமூகபணிகளை கண்டு அதன்பால் ஈர்க்கப்பட்டு தன்னையும் ஏழைகளுக்கு சேவைசெய்வதில் முழுநேரமாக ஈடுபடுத்திக்கொண்ட எளிய மனிதர். இயற்கை அழகை ரசிப்பதிலும், பறவை மற்றும் விலங்குகளின் மீது தனி அன்பு செலுத்தும் குணம் கொண்டவர்.
மும்பையில் உள்ள ஆதித்ய ஜோத் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ். நடராஜன் அவர்களின் தந்தையாவார்.
1942-1946களில் ரமண மகரிஷியை பலமுறை சந்தித்துள்ளார். 1950களில் பாண்டிசேரியில் உள்ள அரபிந்தோ ஆசிரமத்திற்கு சென்ற போது, அன்னையுடன் டென்னிஸ் விளையாடிய வாய்ப்பு இவருக்குகிடைத்த்து. அன்னையே இவரை ஆசிரமத்தின் எல்லா இடத்திற்கும் அழைத்துச்சென்று காட்டியுள்ளார். ஜஸ்டிஸ் மார்த்தாண்டம் பிள்ளை இவருக்கு வாழ்க்கை வழிமுறைகளை சொல்லிகொடுத்துள்ளார. இளம் வயதில் இதுபோன்று பெருமக்களுடன் பழக்கம் ஏற்பட்டதால், எப்போதும் எளிமையை விரும்பும் குணம் இவருக்கு உண்டானது. பிரபல கண் மருத்துவர் டாடக்டர் ஜெ. இ. அப்ரஹம் நோயாளிகளை கையாளும் விதத்தை பார்த்ததில் இருந்து, அவரைப்போன்று இவரும் நோயாளிகளை முழுவதுமாக பரிசோதனை செய்வதை கடைபிடித்துவருகிறார்.
சென்னை அரசு கண் மருத்துவ மனையில் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது நேர்மையை கண்டு பலரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர். நிறைய மாணவர்கள் இவரிடம் பயிற்சி பெற்று இன்று உலகப்புகழ்பெற்று திகழ்கிறார்கள்.
கண் சம்பந்தமாக நாடகங்களையும், ‘எச்சரிக்கை’ என்னும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார். வைட்டமின் குறைபாடு பற்றி ‘வெண்ணை உண்டு நெய் இல்லை’ என்ற இவரது நாடகம் துர்தர்ஷனில் ஓளிபரப்ப்பட்டது. கண் பாதுகாப்பு பற்றி புத்தகங்கள் நிறைய எழுதியுள்ளார். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், இவரை சந்தித்த போது இவரின் சேவைபற்றியும் கண்பாதுகாப்பு புத்தகம் பற்றி மனம்திறந்து பாராட்டியுள்ளார்.
மதுரை அரவிந்த் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி. வெங்கடசாமியுடன் மிகுந்த நட்பு கொண்டவர். அவர் எப்போதும் அமைதியாக இருப்பார் மற்றவர்கள் சொல்வதை மிகப்பொறுமையாக கேட்பார் என்கிறார்.
சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் அவர்களுடன் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகளை பலமுறை சந்தித்துள்ளார். சுவாமிகள் இவரது சமூக சேவையை பாராட்டி சேவா ரத்னா மற்றும் வித்யா ரத்னா விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.
இளம் பிராயத்திலிருந்து கிரிக்கெட், பேட்மின்டன், டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் இவர் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையாவர். 1935 முதல் 1996 சென்னையில் சைக்கிளில் எல்லா இடங்களுக்கும் செல்வார், இதனால் எல்லா தரப்பு மக்களிடம் பழுகும் வாய்ப்புகிடைத்த்தால் இவருக்கு ஈகோ பிரச்சனை எதிவும் இல்ல.
ஐரோப்பா, இங்கிலாந்து,. அமெரிக்கா, பேக்ங்காக், மலேசியா, சிலோன் போன்ற பல நாடுகளுக்கு சென்றுவந்துள்ளார். இவரது எளிமையால் நண்பர்களை மனதில் எப்போதும் தனி இடம்பிடித்தவர். நிறைய கண் மருத்துவர்களின் மாநாடுகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அறியாமை காரணமாக எவரும் கண்பார்வை இழக்க்கூடாது என்பது தான் இவரது லட்சியம்.
டாக்டர் மு கருணாநிதி முன்பு முதலமைச்சராக இருந்த போது கிராமம் கிராமாக சென்று ஏழைஎளியவர்களுக்கு கண் மருத்து முகாம்களை நடத்தி லட்சக்கணக்கான மக்களுக்கு கண் ஒளி அளித்தபெருமை இவருக்கு உண்டு. எப்போதும் தன் கீழ் உள்ளவர்களிடம் அன்பாகவே நடப்பார், அவர்களது நடைமுறையில் தவறு கண்டால் அதுபற்றி விளக்கம் அளித்து வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று பலருக்கு தன் அனுபவத்தை சுட்டிக்காட்டி நல்வழிபடுத்தியுள்ளார்.
கண்பற்றி விளக்கம் அளிப்பதிலும், கண் சம்பந்தமாக விளக்கப்படங்களையும் மற்றும் மாடல்களை கெர்ணடு நிறைய இடங்களில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்து பாராட்டு பெற்றவர். பள்ளிகள் கல்லுரிகள் மற்று மாநாடுகளில் கண் சம்பந்தமாக பேருரைகள் வழங்கிவருகிறார். இன்னும் சென்னை சயின்ஸ் சென்ட்ரில் என்எஸ்எஸ் ஐ கார்னர் என்ற பகுதியில் கண் சம்பந்தமான பல பொருட்களையும் விளக்கப்படங்களையும் பார்வைக்கு வைத்துள்ளார். இந்த வயதிலும் என்றும் இளைங்கனை போன்று மக்களுக்கு கண் பார்வை அளிப்பதிலும், மாணவர்களுக்கு பாடங்கள் எடுப்பதிலும், சமூக சேவையிலும் மிகவும் சுருப்பாக உள்ளது பலரை ஆச்சரியப்படவைத்துவருகிறது.
இவரது மனைவி திருமதி கமலா சுந்தரம். என் மனைவி இல்லையேல் நான் இல்லை என்பார். இவருக்கு திரு. சென்பகராமன், மற்றும் டாக்டர் எஸ். நடராஜன் என்ற இரு மகன்கள். மகள் சொர்ணா. இவர் ஒரு ஓவியர் மற்றும் கலையில் ஈடுபாடுகொண்டவர்.
டாக்டர் எஸ். நடராஜன்
தலைவர். ஆதித்ய ஜோத் கண்மருத்துவமனை,
சமூக சேவை மற்றும் இலவச கண் மருத்துவம் அளிப்பதில் தன் முன்னோர்களின் வழியை கடைபிடித்துவருகிறார். இவர் இலவசமாக விழித்திரை ஆறுவைசிகிக்சை அளித்து மிக கடினமாக அறுவைசிகிச்சைகளையும் எளிதில் செய்துமுடிக்கும் விசேஷ திறமை கொண்டவர். பள்ளிக்குழந்தைகளுக்காக இலவச கண் பரிசோதனைகள் செய்துவருகிறார். பலவெளிநாடுகளுக்கு சென்று தன்திறமையை அவர்களோடு பகிர்ந்து பாராட்டுபெற்றுள்ளார். செயற்கை விழித்திரை ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது குறுப்பிடத்தக்கது.
இந்த மூன்று தலைமுறையினறும் கண் மருத்துவசேவையிலும், இலவச கண் கிகிச்சையிலும் தங்களை ஈடுபடுத்தி ‘மக்கள் சேவையை மகேசன் சேவை’ எனற மற்றவர்களுக்கு முன்உதாரணமாக திகழ்கிறார்கள்.
மூவருக்கும் தமிழ்பற்று மிகவும அதிகம். மேலும் கீழ்உள்ள திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறனர்.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னேர்ற்றான் கொல்எனும் சொல் (குறள் 70, அதிகாரம் 7)
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் (குறள் 67, அதிகாரம் 7)
ராம்கி
No comments:
Post a Comment