Tuesday, May 11, 2010

ஆதித்ய ஜோத்தில் பொற்கரங்களால், பொற்செடி நடுவிழா

மே 1ம் தேதி உழைக்கும் கரங்கள் அனைத்தும் ஒன்று கூடும் நாள். அந்த நல்நாளில் மும்பை வடாலாவில் உள்ள ஆதித்ய ஜோத் கண் மருத்துவமனையில், மும்பை போலீஸ் கமிஷ்னர் திரு. த. சிவானந்தன் ஐபிஎஸ் அவர்கள் தன் பொற்கரங்களால்,  கோல்டன் செயின் மரம் என்று அழைக்ககூடிய Laburnum என்ற செடியினை நட்டார். அப்போது மருத்துமனையின் தலைவர் டாக்டர் திரு நடராஜன் அவர்களை சந்தித்தபோது, இன்று எனது தாத்தா மறைந்த டாக்டர் நடராஜ பிள்ளை அவர்களின் 110 பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவாக இச்செடி இங்கு நடப்பட்டது. இச்சமயம் என் தந்தை டாடகர் என் எஸ் சுந்தரம் அவர்கள் என்னுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அழைப்பை ஏற்ற திரு சிவானந்தன் அவர்கள், தனது பலபணிகளுக்கு இடையே நேரம் ஒதுங்கி தன் பொற்கரங்களால் கோல்டன் செயின் மரம் என்று அடைமொழி கொடுத்து அழைக்கப்படும் இச்செடியினை நட உடன் சம்மதித்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
திரு சிவானந்தன் அவர்கள், பேசும்போது, இம்மரத்தை போன்று ஆதித்ய ஜோத் கண் மருத்துவ மனையும் மேன்மேலும் வளரவும், பல இடங்களில் கண் மருத்துவமனையின் கிளைகள் திறக்கப்பட வேண்டும் என்றார். டாக்டர் நடராஜன் அவர்களின் சமூகசேவையும், சேவை மனப்பான்மையும், வெகுபாக பாராட்டினார்.
மருத்துவ மனை ஊழியர்களும், பல முக்கிய விருந்தினர்களும் இச்மரம் நடுவிழாவில் கலந்து கொண்டனர்.
திரு சிவானந்தன் அவர்களும் டாக்டர் எஸ், நடராஜன் அவர்களும் இயற்கையை ரசிக்ககூடியவர்கள்.
தொகுப்பு
ராம்கி

No comments:

Post a Comment