வாழ்க்கை எனும் பந்து
சர்க்கஸ்களில் ஒரு கோமாளி தன் கைகளில் ஐந்து பந்துகளை ஒன்றின்பின்ஒன்றாக மேலே தூக்கிப்போட்டுக்கொண்டே இருப்பான். அவன் கையில் ஒவ்வொரு பந்தும் ஒருசில நொடிகளே
இருக்கும், மாறிமாறி பந்துகள் மேலும் கீழும் வேகமாக இரண்டு கைகளுக்குமிடயே பறந்து கொண்டுயிருப்பதை பார்த்து நாம் கைதட்டி மகிழ்ந்திருக்கிறோம் அல்லவா? இந்த எளிய விளையாட்டைக்கொண்டு COCO COLA நிறுவனத்தின் தலைவர் பிரேயான் டைசன் என்ன சொல்கிறார் தெரிமா?
“அப்படி அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஐந்து பந்துகளுக்கும் நாம் ஒரு பெயர் இடுவோம். முதல் பந்தின் பெயர் நம் “வேலை”. இரண்டாவது பந்தின் பெயர் நம் “குடும்பம்”. மூன்றாவது பந்தின் பெயர் நம் “உடல்நலம்”, நான்காவது பந்தின் பெயர் நம் “நண்பர்கள்”, ஐந்தாவது பந்தின் பெயர் நம் “தைரியம்”. இப்போது இந்த ஐந்துபந்துகளையும் (அதாவது வேலை, குடும்பம், உடல்நலம், நண்பர்கள், தைரியம்) மேலேதூக்கிபோட்டு அந்த கோமாளி விளையாடுவது போன்று இன்று வாழ்கையில் நாம் விளையாடிக்கொண்டிருக்கிறோம். “வேலை” என்ற பந்தானது ரப்பரால் ஆனது போன்றது. அதை கீழே போட்டால், தானாக மேலே எழும்பி விடும்.
ஆனால், மற்ற பந்துகளான நம் குடும்பம், உடல்நலம், நண்பர்கள், தைரியம் போன்றவை கண்ணாடிகளால் செய்யப்பட்டது போன்றது. இவற்றில் நாம் எதைத் தவறவிட்டாலும், சட்டென உடைந்து, சுக்கு நூறாக போய்விடும். எடுத்து ஒட்டவைக்கவோ அல்லது பழையவடிவத்திற்கு கொண்டுவரவோ யாராலும் இயலாது. இதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் இந்த நான்கு பந்துகளையும் மிக கவனமாக கையாளவேண்டும்”.
Dr. S. NATARAJAN
Monday, December 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment