Saturday, June 25, 2011

Shivgyanmallar - Late K. Shenbagarama Pillai

Please find scanned copy of the book called Shivgyanmallar.In 2004 the book was published on occasion of 1st death anniversary of my maternal grandfather K. Shenbagarama Pillai. The book contains shlokas on Lord Shiva, Ganesha.
 












My good friend Mr. NILAKANTAN SUNDARAM interviewed my grandmother Mrs. Swarnatamal wife of Late K. Shenbagarama Pillai. Please find the article

(மும்பையில் பிரபலமான தமிழர் ஒருவர் அழைப்பிற்கிணங்க , அவர் வீட்டில் மதிய விருந்திற்குச்
சென்றிருந்தேன் . விருந்திற்குக் காரணம், 'நான்கு தலைமுறை நாயகி'யாகிய அவரது தாய்வழிப்
பாட்டிதான்...! ஆம், 94 வயதிலும் ,ஐம்புலன்களும் சீராகச் செயல்பட்டு, மகிழ்ச்சியுடன் இருக்கும்
தனது பாட்டியுடன்  ,மதிய உணவு உண்ண, தனது நெருங்கிய நண்பர்கள் சிலரை அழைத்திருந்தார்
அப்பிரபலம்..அதில் அடியேனும் ஒருவன்..! விருந்து முடிந்ததும் ,பதினைந்து நிமிடங்கள் பாட்டியை
ஒரு  'மினி பேட்டி' கண்டேன்...கேட்ட கேள்விகளுக்கு, நறுக்குத் தெறித்தாற்போல ,'டாண் ' 'டாண் ' எனப்
பதிலளித்தார், நெல்லைத் தமிழில் .இதோ அந்த மினி பேட்டி...)
  " நீங்க பொறந்த ஊர், பெற்றோர் ,உடன்பிறப்புகள் பற்றி சொல்லுங்க, பாட்டி.."
  " பொறந்தது சங்கரன்கோவில். அப்பா பேர் எஸ்.சண்முகசுந்தரம் பிள்ளை ,அம்மா பிச்சம்மா.
    கூடப் பொறப்பு, ஒரு அண்ணன், ரெண்டு தம்பிங்க ,மூணு தங்கச்சிங்க...இப்போ மிஞ்சியிருப்பது
  நானும் ஒரு தங்கச்சியும்தான்.. தென்காசியிலதான் இருக்கோம்.."
    " வாழ்க்கைப் பட்டது....வசித்து வநத ஊர்...? "
   " எல்லாம் தென்காசியிலதான்.."
  " கணவர் பெயர்..?" ( வேண்டுமென்றேதான் ,இக்கேள்வி கேட்டேன்.)
   பாட்டியின் முகம் அப்படியே, வெட்கத்தில் சிவந்தது...தனது கொள்ளுப்பெத்தியை
  அழைத்து ,'அவர்' பெயர் கே.செண்பகராம பிள்ளை என்று சொல்லவைத்தார் ..(நாங்கள்  எவ்வளவோ
  முயன்றும் ,கணவர் பெயரை தன் வாயால் பாட்டி  சொல்லவேயில்லை..நெல்லைச் சீமைப்
  பெண்களுக்கே உரிய  குணமிது)...
    பாட்டி தொடர்ந்து ,பேசினார்.. " ' அவர் ' பேர கொள்ளுப் பேத்தி சொல்லிட்டாள்..மவராசன்
  அவர்... விவசாயம்தான் பார்த்தாரு.. கிட்டத் தட்ட 300 ,400 ஏக்கர் பூமி ..நல்லா விவசாயம்
 பண்ணினாரு.என்னையும் நல்லாப் பாத்துக்கிட்டாரு..கல்யாணம் கழிஞ்சு, வடக்கே காசி,டெல்லி
வரை எல்லா ஊருக்கும் கூட்டிப் போய் சுற்றிக் காட்டினாரு..தென்காசி சுற்றுவட்டாரத்துல எந்தக்
கோவில் திருவிழா நடந்தாலும் ,வில்லுவண்டி பூட்டி கூட்டிப்போவாரு..ஒரு குறையுமில்லாமப்
 பாத்துகிட்டாரு.. ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க எங்களுக்கு. ஒருத்தி கமலா ,பம்பாயில்தான்
இருக்கா.. இன்னொரு பொண்ணு கோமதி திருநெல்வேலியில இருக்கா. நல்லா சந்தோசமா இருக்காங்க..
பாவம் ,அவருதான் என்னைய முந்திக்கிட்டு, 8 வருசம் முன்னாலே காலமாயிட்டாரு.."
சொல்லும்பொழுது, அவர் அறியாமலே ,பாட்டியின் விழியோரங்களில் கண்ணீர் தேங்கியது..
 பேச்சை மாற்றவேண்டி இன்னொரு கேள்வி கேட்டேன்..
     " அது சரி பாட்டி, இப்போ உங்க தினசரி பொழுது எப்பிடி போகுது?"
    " அதுவா.. நல்லாத்தான் போகுது. காலைல 6 மணிக்கு எழுந்திரிச்சு, பச்சத் தண்ணில குளிப்பேன் .
    கொஞ்ச நேரம் பூசை செய்வேன்.' டாண்'னு 9 மணிக்கு இட்லி-சட்னி  பலகாரம்...!மதியம் 12 மணிக்கு
   சமையல் செய்து  ,1 மணிக்குச் சாப்பாடு..!கொஞ்சம் கண் அசறல்..  ! சரியாக சாயந்தரம் 4 மணிக்கு,
   அண்டை-அசல் வீட்டு தோழிங்க என் வீட்டுக்கு வருவாங்க.. ..! ஊர்வம்பு பேசவே மாட்டோம்...!அவங்க அவங்க
   பேப்பர்ல படிச்ச நாட்டு, உலகச் செய்திகள சொல்லுவாங்க.. அதைப்பற்றி.. எங்களுக்குத் தெரிஞ்சவரை
   விவாதிப்போம்... 5 மணிக்கு கோயில் போவோம் ...7 மணிக்குத் திரும்புவோம் ...அப்புறம் லேசா
   ஏதாவது சாப்பிட்டு , 9 மணிக்கெல்லாம் தூங்கிடுவேன்..இதுதாம்ப்பா என்னோட தினசரி வாழ்க்கை அட்டவணை..."
      சற்றே அசந்து விட்டேன், நான். நான்கு 'கிழடுகள்' -அதிலும் பெண்கள் - சேர்ந்தாலே ,ஊர்வம்பு ஒன்றையே
   அசைபோடும் பழக்கத்திலிருந்து, வேறுபட்டு.. உலக நடப்புச் செய்திகளை விவாதிக்கும் இவர்களது பழக்கம்
   வியக்க வைக்கிறது..
       " ஆமாம், பாட்டி , தென்காசிலே இருக்கீங்க.. குற்றாலம் போயிருக்கீங்களா?"
     கொட்டும் அருவியென வருகிறது ,பாட்டியின் பதில்..!
      " என்ன கேள்வி இது..ஒவ்வொரு வருசமும் குத்தாலம் போயி அருவில குளிச்சுத்தான் வாறேன்...வீட்டு
     வாசல்ல பஸ்.. அஞ்சு ரூபாதான் சார்ஜு.. போகாம இருப்பேனா?' இந்தவருஷமும் போவேன். 15 வருசம் முன்னால இருமுடி கட்டி ,
     சபரிமலைக்குக்   கூட ,தோழிங்க கூடப் போயிட்டு வந்தேன்.. மனசில தெம்பு இருந்தா, ஒடம்புல பலம் வந்துடும்.."
        " சரி பாட்டி, உங்க பேரன்,பேத்திங்க ,கொள்ளுப்பேரன்-பேத்திகளுக்கு மட்டும்மில்லாது, இன்னிக்குள்ள
    இளசுகளுக்கு நீங்க என்ன சொல்ல ஆசைபடுறீங்க..?"
       " நான் என்னத்த சொல்றது..? நல்லாப் படிங்க, நல்லா பழக்க-வழக்கங்கள கடைப்பிடிங்க  !எப்போதும்
       சிரிச்சுக்கிட்டே, சந்தோசமா இருங்க.. எல்லோரும் எப்ப்போதுமே சந்தோசமா இருக்கணும்.."
         ஒரு விதமாக ,மினி பேட்டி முடிந்து ,கிளம்பும் நேரத்தில் , " பாட்டி, ஒங்க நூறாவது வயசிலேயும்
       இதுபோல ,ஒரு மதிய விருந்தின் போது, ஒங்கள பேட்டி எடுக்கணும்...சரிதானே? " என்றேன்.
        " நூறு என்ன, என்னோட நூத்தி இருபது வயசிலும்  வா, பேசலாம்" என்றார். அவரது ,ஆக்கபூர்வமான
       சிந்தனை வியக்க வைத்தது.! 'இவர் நிச்சயமாக, ஒரு வித்தியாசமான பாட்டிதான் ' என்ற நினைப்போடு
       விடை பெற்றேன் .! தன் மகள்,மருமகன், பேரன்-பேத்திகள், கொள்ளுப்பேரன்-பேத்திகள் புடைசூழ இனிதே
        வழியனுப்பினார். மனம் நிறைய மகிழ்ச்சியுடன் ,நிறைவுடன் திரும்பினேன்.
      ( ஆமாம், தொடக்கத்தில், ' இந்தப் பாட்டி, மும்பை-வாழ் பிரபல தமிழரின் பாட்டி ' என்றேனே...!.அந்தத் தமிழர் யார் என்று
       அறிய வேண்டாமா?  அவர், வேறு யாருமல்ல, நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்தான்....இன்னும் என்ன ,
      சஸ்பென்ஸ்.. அவர்தான், ' கண்-மருத்துவ உலகில் ' , கொடிகட்டிப் பறக்கும், நம் டாக்டர்.S .நடராஜன் தான்..! )


       திரு. சுதாகர் அவர்களுக்கு,
        மேலே , நீங்கள் காண்பதுதான் , மும்பை-வாழ் பிரபல கண்-மருத்துவர்
       டாக்டர் .S .நடராஜன் அவர்களது ,94 வயது பாட்டி கொடுத்த 'மினி-பேட்டி'.
       " தென்காசித் தென்றலுடன்  ஒரு மினி-புயல் பேட்டி "!
         நன்றி.வணக்கம்.
        அன்புடன்,
        N .சுந்தரம். 
 

No comments:

Post a Comment