Friday, January 27, 2012
Monday, January 23, 2012
அன்புள்ள டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கத்தின் தலைவர் திரு, திருநாவுக்கரசு அவர்களே, செயலர் திரு செல்லப்பா அவர்களே, திரு நந்தகோபால் அவர்களே, திரு. ராஜா அவர்களே, செயற்குழு மற்றம் இதர உறுப்பினர்களே, சிறப்புரை ஆற்றவந்திருக்கின்ற திரு, சேதுராமன் சாத்தப்பன் அவர்களே, சிறப்பு அழைப்பாளர் திரு ஸ்ரீகர் விஷ்ணு சௌதரி அவர்களே, நாளைய சமுதாயத்தின் தூண்களே, என் இனிய சகோதர, சசோதரிகளே உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது. இச்சங்கம் கடந்த பத்து ஆண்டுகளாக செய்துவருகின்ற சமூக சேவைகள் அனைத்தும் பாராட்டத்தக்கது. அதற்காக அச்சங்கத்தின் தலைவர் முதல் அனைத்து உறுப்பினர்களையும் நாம் அனைவரும் மனமார பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் தமிழ் வகுப்பு ஏற்பாடு செய்தல், இரத்த தான முகாம்கள் நடத்துதல், ஏழை மாணவ மாணவியர்களுக்கு பாடபுத்தகங்ள் மற்றும் சீருடை வழங்குதல் மற்றும் பள்ளி கட்டணம் அளித்தல், 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை ஊக்கிவிக்கும் விதத்தில் பரிசளித்தல், தமிழில் அதிக மார்க்கு வாங்குபவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்தல், அனாதை இல்லங்களுக்கு சென்று சேவை செய்தல், ரங்கோலி மற்றும் ஓவியப்போட்டி வைத்தல் போன்ற பலவித சமூக சேவைகளை செய்து வருவதைப் பார்க்கும் போது, கூடிய விரைவில் மும்பையில் மிகச்சிறந்த சங்கமாக நம் டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் ஆகிவிடும் என்றே எனக்கு தோன்றுகிறது. இச்சங்கம் கூடிய விரைவில் ஒரு நுலகம் (லைப்ரரி) ஒன்றை திறக்கவுள்ளதாக அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். தானத்தில் சிறந்தது கண் தானம். அதனால் கண்தானம் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எங்கள் ஆதித்ய ஜோத் கண் மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட இச்சங்க உறுப்பினர்களை அழைக்கிறேன். இதுபோன்று கண்பாதுகாப்பு மற்றும் பரிசோதனை முகாம்களையும் எங்கள் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தலாம். பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை அளித்துவருவதில் எங்கள் மருத்துவமனையும் முக்கிய இடம் பெற்றுள்ளது. என்னை இச்சங்க விழாவில் அழைத்ததற்கு சங்க உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இச்சமயத்தில், இச்சங்கம் மேன்மேலும் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கு முன் உதாரணமாக விளங்க வேண்டும். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்தி, விடைபெறுகிறேன், வாழ்க தமிழ், வாழ்க டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம், ஜெய் ஹந்த் |
Wednesday, January 4, 2012
Subscribe to:
Posts (Atom)